ஆன்மீகம்விரதங்கள்

ஏகாதசி விரதங்களால் கிடைக்கும் பலன்கள்

மோட்சத்தை அளிக்கும் விரதம் ஏகாதசி விரதம். இந்நாள் ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த
தினமாகவே உள்ளது. அமாவாசை, பெளர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் அமாவாசை, பெளர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இதில் வளர்பிறை 1 ஏகாதசியும், தேய்பிறை 1 ஏகாதசியும் வரும். ஆண்டு முழுதும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்க பெரும் பயன்கள் பல இருக்கின்றது. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனைத் தந்தாலும் வைகுண்ட பதவிக்கும் வழி வகுக்கும் என்பது சிறப்பு.

சித்திரை

சித்திரை மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி “காமதா ஏகாதசி “, தேய்பிறை ஏகாதசி “பாப மோகினி
ஏகாதசி” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு விரதங்களை இருப்பவர்களுக்கு விரும்பிய
அனைத்து பேறும் கிடைக்கும்.

வைகாசி

வைகாசி மாதம் வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி “மோகினி ஏகாதசி “,தேய்பிறையில் வரும்
ஏகாதசி “வருதித் ஏகாதசி “என்றும் அழைக்கப்படுகிறது . இந்த ஏகாதசி காலங்களில் விரதம்
இருப்பவர்கள் அனைவரும் ,இமய மலை சென்று பத்ரி நாதரை தரிசனம் சென்று வந்ததற்கான
பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

ஆனி

ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “நிர்ஜலா ஏகாதசி” என்றும், தேய்பிறை ஏகாதசி
“அபார ஏகாதசி “என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தினை இருப்பவர்கள் சொர்க்கத்தை
அடைவார்கள்.

ஆடி

ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “சயனி ஏகாதசி”, தேய்பிறை ஏகாதசி “யோகினி ஏகாதசி ” என்றும் கூறுவர். இந்த விரதத்தை இருந்தால் அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள்
கிடைக்கும்.

ஆவணி

ஆவணியில் வரும் வளர்பிறை ஏகாதசி “புத்ரஜா ” என்றும், தேய்பிறையை “காமிகா” என்றும் கூறுவர். இந்த விரதத்தை மேற்கொண்டால் மக்கட் பேறு கிடைக்கப் பெறுவார்கள்.

புரட்டாசி

புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி “பத்ம நாபா “, தேய்பிறையில் வரும் ஏகாதசி “அஜா “என்றும் பெயர் பெற்றது .இந்த விரதம் இருப்பவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் .

ஐப்பசி

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பாபாங்குசா “என்றும்,தேய்பிறையில் வரும் ஏகாதசி “இந்திரா” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் இருந்தால் வறுமை ஒழியும். நோய் அகலும். பசிப்பிணி நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

கார்த்திகை

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி “பிரபோதின்” எனப்படும்.இந்த விரதம் இருந்தால்
இருபத்தியோரு தானம் செய்வதற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான “ரமா ” தினத்தில்
இறைவனுக்கு பழங்களை கொண்டு நெய்வேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும். மார்கழி மாத ஏகாதசி “வைகுண்ட ஏகாதசி ” என சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மார்கழி

ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவே தான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு வாய்ந்தது. தேய்பிறை ஏகாதசி “உத்பத்தி ஏகாதசி” எனப்படும்.

தை

தை மாத வளர்பிறை ஏகாதசி “புத்ரதா “என்றும்,தேய்பிறை ஏகாதசி “சுபலா “என்றும் கூறுவர்.
இந்த விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.

மாசி

மாசி மாத வளர்பிறை ஏகாதசி “ஜெயா “,தேய்பிறையில் வரும் ஏகாதசி “ஷட் திலா” என்றும் கூறுவர் இந்த விரதம் இருப்பதால் மூதாதையரின் பக்திக்கான வழியை பெறுவார்கள்.

பங்குனி

பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “விஜயா ” ஏகாதசி .இந்நாளில் விரதம் இருந்தால்
7 வகையான தானியங்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து மகா விஷ்ணுவை வணங்கினால்
கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வளர்பிறை ஏகாதசி “ஆமலகி” என்றும் அழைப்பர். இந்நாளில் விரதம் இருந்தால் பசி தானம் செய்த பலன் கிடைக்கும். ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி “கமலா ஏகாதசி” அன்று மகா லக்ஷ்மியை வழிபடுவது சிறப்பு.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button