ஆன்மீகம்சித்தர்கள்

சித்தர் நிலைக்கு உயருவது எப்படி ? 18 சித்தர்கள் யார் ?

siththarkal

சித்தர் என்றால் சித்தி பெற்றவர், சிந்தனை உடையவர் என்பது பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி செயற்கரிய, காரியங்களை செய்வது சித்தர்களது செயலாகும். உலகில், கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால் நமது கோரிக்கைகள் கடவுளிடம் போய் சேர ஒரு கருவியாக இருப்பவர்கள் சித்தர்கள். கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன் வந்து நமக்கு அளிப்பார்கள்.

முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு. அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத் தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. பரிகாரங்கள் செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்ம வினை பலம் அதிகமாக இருக்குமானால் அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைமை இருக்குமானால் அதிலிருந்து காப்பற்றுவது யார் ?

சித்தர்கள் மனிதனிடம் எதிர்பார்ப்பது எதுவும் இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சிந்தனை செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும். இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருப்பதைக் காணலாம்.

அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை வேண்டினால் நினைத்தது நடக்கும். நாம் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியை தேடி தரும் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. பழனி மலை பிரபலமாகவும் இருப்பதற்கு சித்தர்கள் ஒரு காரணம். அந்த ஸ்தலத்தில் நவ பாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் போக சித்தர். எல்லா மக்களும் திருப்பதி மலை நோக்கி செல்வதும் அங்குள்ள கொங்கணர் சித்தரே காரணம்.

18 சித்தர்கள்

 1. திருமூலர்  – சிதம்பரம்
 2. இராமதேவர்  -அழகர் மலை
 3. அகத்தியர் -திருவனந்தபுரம்
 4. கொங்கணர்  – திருப்பதி
 5. கமலமுனி -திருவாரூர்
 6. சட்டை முனி  – திருவரங்கம்
 7. கருவூரார்  – கரூர்
 8. சுந்தரனார் – மதுரை
 9. வான்மீகர்  – எட்டிக்குடி
 10. நந்தி தேவர்  – காசி
 11. பாம்பாட்டி சித்தர் – சங்கரன் கோவில்
 12. போகர்  -பழனி
 13. மச்ச முனி  – திருப்பரங்குன்றம்
 14. பதஞ்சலி  – இராமேஸ்வரம்
 15. தன்வந்திரி  – வைதீஸ்வரன் கோவில்
 16. கோரக்கர்  – பொய்யூர்
 17. குதம்பை சித்தர்  – மாயவரம்
 18. இடைக்காடர் –திருவண்ணாமலை

வெறும் 18 சித்தர்கள் மட்டும் சித்தர்கள் அல்ல.

நாடு,  நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே. அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால் மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்று கொள்கிறார்கள் என்பது பொருள். அதன்பின் அந்த மனிதனின் வாழ்க்கை செம்மையாகவும், நன்றாகவும் இருக்கும். நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கு சித்தர்கள் உதவ மாட்டார்கள்.

நாம் இனி வரும் சித்தர் பதிவுகளில் முதலில் உள்ள 18 சித்தர்கள் குறித்து காண்போம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
1
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button