Warning: mysqli_num_fields() expects parameter 1 to be mysqli_result, bool given in /var/www/vhosts/aanmeegamtamil.com/httpdocs/wp-includes/wp-db.php on line 3402
தீபாவளி திருநாளில் உள்ளிருக்கும் ஆன்மீகம் | ஆன்மீகம், திருவிழாக்கள்
ஆன்மீகம்திருவிழாக்கள்

தீபாவளி திருநாளில் உள்ளிருக்கும் ஆன்மீகம்

தீபாவளியை கொண்டாட உற்சாகத்துடன் எல்லோரும் ரெடி ஆகிட்டு இருப்பீங்க. இந்த சமயத்தில் தீபாவளியைப் பற்றி ஆன்மீகத்தில் என்ன உள்ளது? என தெரிந்து கொண்டாடால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். தீபம் என்றால் விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகை தீபாவளி. நம் மனத்தில் உள்ள இருட்டாகிய அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்றி, பிரகாசமான ஒளியை நாம் கொண்டு வரவேண்டும் என்பதே இதன் கருவாகும்.

தீபாவளியை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ராமர் 14 வருடங்கள் வனவாசம் முடித்து ,நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராண கதைகளின் படி, கிருஷ்ணனின் இரு மனைவிகளில் ஒருவரான பூமாதேவிக்கும், வராக (பன்றி) அவதாரம் எடுத்த கிருஷ்ணனுக்கும் பிறந்த மகன் நரகாசுரன்.

நரகாசுரன் பிரம்மாவிடம் தன் தாயால் மட்டுமே மரணம் உண்டாக வேண்டும் என்று வரம் வேண்டி னான்.பிரம்மாவும் வரம் அளித்தார். தாய் தன் மகனை கொல்ல மாட்டாள் என்ற காரணத்தால் அவ்வரம் வாங்கினான்.தேவர்களை துன்புறுத்தி வந்ததால், துன்பத்திலிருந்து விடுபட கிருஷ்ண பகவானை தேவர்கள் நாடினர். அதர்மம் தோன்றும் போது ,கிருஷ்ணர் அவதாரம் எடுப்பார்.

பூமாதேவி சத்ய பாமாவாக அவதரித்து, கிருஷ்ணருக்கு துணையாக தேர் ஓட்டி சென்றாள். கிருஷ்ணனுக்கும், நரகாசுரனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணனின் எண்ணம், நரகாசுரனை பூமா தேவியால் மட்டுமே கொல்ல முடியும் என்பதால் கிருஷ்ணன் நரகாசுரனின் அம்பு வரும் போது வீழ்வது போல் நடித்தார். தேவி மானிட பிறவி எடுத்ததால், தன் மகனை வீழ்த்துகிறோம் என்பதை மறந்து, தன் கணவனை காப்பாற்ற நரகாசுரனை கொன்றாள்.

கணவனுக்கு மனைவி துன்பத்திலும்,இன்பத்திலும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதை உலக மக்களுக்கு கிருஷ்ணபகவான் உணர்த்துகிறார். தன் இறப்பை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என நரகாசுரன் பகவானிடம் வேண்டிக் கொண்டதால், நாம் எல்லோரும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.தீபாவளி அன்று நாம் சூரியன் வருவதற்கு முன்பாக எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும். அன்று தண்ணீரில் கங்கையும்,எண்ணெயில் லக்ஷ்மியும், அரப்பில் சரஸ்வதியும்,சந்தனத்தில் பூமா தேவியும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும் இருப்பதாக ஐதீகம்.

எல்லோரும் சிறப்பாக, மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுங்க. என்றென்றும், உங்கள் குடும்பங்களில் மகிழ்ச்சியும், இன்பமும் நிலைத்திருக்க நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன். நம் வீட்டு பக்கத்தில் உள்ள ஏழை மக்களுக்கு ஆடை, பலகாரம் வாங்கி கொடுங்க. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். நீங்களும் சந்தோஷமாக இருங்கள். உங்களை சுற்றி இருப்பவரையும் சந்தோஷப்படுத்துங்கள்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button