ஆன்மீகம்பரிகாரங்கள்

நவகிரகங்களுக்கு ஏற்ற நவதானிய பரிகாரங்கள்

நாம் செய்யக் கூடிய பரிகாரங்கள் எதுவென்றாலும் அதுபோய்ச் சேருகின்றன இடம் ஒன்றுதான். அது நவகிரங்களில் ஒன்றுதான். பரிகாரம் செய்பவர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஜோதிடத்தின் அடிப்படையே நவகிரகங்கள் தான். நம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளதை வைத்து தான் நமக்கான பலன்கள் அமைக்கின்றன. ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்களிலிருந்து நிரந்தர தீர்வு காண்பதற்கான எளிய பரிகாரங்கள் குறித்து இங்கு காண்போம்.

சூரியன்

நவகிரகங்களின் தலைவனாகப் பார்க்கப்படுபவர் சூரிய பகவான். கோதுமை சூரியனுக்கு உகந்தது. அதனால் கோதுமையால் செய்யப்பட்ட சுண்டல் அல்லது உணவை படைத்து வணங்குவதால் சூரியனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் நீங்கும்.

சந்திரன்

சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். அரிசியால் செய்யப்பட்ட உணவை படைத்து சந்திரனை வணங்கி வர தோஷம் நீங்கி நீண்ட ஆயுளும் ஏற்படுவதோடு, சந்திரனால் ஏற்பட்ட தோஷமும் இன்னல்கள் நீங்கும்.

செவ்வாய்

செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவரை. துவரம் பருப்பால் செய்யப்பட்ட பதார்த்தங்களைப் படைத்து செவ்வாய் பகவானை வணங்கினால், அவரால் ஏற்படக் கூடிய விபத்து, காயங்கள் உள்ளிட்ட தீய பலன்களை தவிர்க்கலாம். அதோடு செவ்வாயால் ஏற்படக்கூடிய திருமணத்தடை நீங்குவதோடு, சொத்துக்கள் சேரும்.

புதன்

கல்விக்கடவுளாக பார்க்கப்படுகிறார் புதன் பகவான். புதனுக்கு உரியது பச்சை பயிறு தானியத்தை வைத்து அல்லது தானியத்தால் செய்யப்பட்ட உணவை வைத்து வழிபடுவதால் கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் சிறக்கும். தொழிலில் நல்ல வெற்றியையும், ஜோதிட கலையில் ஞானமும், புகழும் பெறலாம்.

குரு

குரு பகவனானுக்கு உரிய தானியம் கடலை. மங்களத்தை அருளக் கூடிய குருவினால் ஏற்படக் கூடிய தோஷங்கள் நீங்க கடலையைப் படைத்து வணங்கி வர சுப காரியங்கள் சிறப்பாக நடந்து மங்கள பாக்கியங்கள் உண்டாகும்.

சுக்கிரன்

நவகிரகங்களில் சுக போகங்களைத் தரக் கூடியவர் சுக்கிர பகவான். மொச்சை பயிறு சுக்கிரனுக்கு உரியதாகும். மொச்சை பயிறு படைத்து வழிபட்டு வருவதால் கலைகளில் வித்தகராகத் திகழலாம்.

சனி

சனி பகவானுக்கு உரிய தானியம் எள். எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், எள் சேர்த்த உணவை படைத்து சனி பகவானை வணங்கி வருவதால் அனைத்து தடைகளும் நீங்குவதோடு, விரோதங்கள் நீங்கி, கஷ்டங்கள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். தீராத நோய் தீர்ந்து ஆயுள் விருத்தியாகும். பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.

ராகு

நிழல் கிரகமான ராகு பகவானுக்கு உரிய தானியம் உளுந்து. உளுந்து தானியத்தால் தயாரித்த பதார்த்தத்தை படைத்து வழிபட்டு வணங்கி வருவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். திடீர் பணக்காரனாக்கும் நிலையை இராகு பகவான் தரக் கூடியவர். ராகுவை வணங்கி வர முயற்சிகளுக்கு வெற்றியைத் தரும். ராகுவை வணங்கி வர துர்க்கை அம்மனின் அருள் பெற முடியும்.

கேது

நிழல் கிரகமான கேது பகவானுக்கு உரிய தானியம் கொள்ளு. தீராத நோய் தீரவும், குறையாத மருத்து செலவுகள் பெரியளவில் குறையவும், மனதில் மகிழ்ச்சியும், தைரியத்தையும் கொடுக்கக் கூடிய கேது பகவானுக்கு கொள்ளு படைத்து வணங்கவும். கேதுவை வணங்கி வர ஞானத்தை தரக்கூடிய வினை தீர்க்கும் விநாயகரின் அருள் கிடைக்கும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button