செய்திகள்

நவ.16 முதல் சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி: பம்பையில் குளிக்க தடை

sabarimala open after corona

கொரோனா பாதிப்புகளுக்கிடையே சபரிமலையில் வரும் நவ.16 முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு சீசன் வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை நடைபெறும். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால், மாநில அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிக்காக குழு ஆலோசனை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என்றும், 65 வயதுக்கு அதிகமானோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டோருக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அனுமதி கிடையாது. பக்தர்களுக்காக பேருந்து வசதியும் அதிகரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. தரிசனம் முடித்தவுடன் உடனடியாக கோயிலை விட்டு கிளம்ப வேண்டும். இரவு நேரத்தில் கோயில் வளாகத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலை ஏறும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். பம்பையில் குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எருமேலி மற்றும் பம்பை பகுதிகளில் பக்தர்கள் குளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். நிலக்கல் மற்றும் பம்பா பகுதிகளில் பக்தர்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் இதுபோன்ற பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றியே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button