ஆன்மீகம்தெய்வங்கள்

பஞ்சமுக ஆஞ்சநேயர் வரலாறு

History of Panchamuga Anjaneyar | panchmukhi hanuman

ஆஞ்சநேயர் பக்தர்கள் பலருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பற்றி தெரிந்திருப்பதில்லை. இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். பஞ்சமு ஆஞ்சநேரயர் என்றால் ஐந்து முகங்களைக் கொண்ட விநாயகர் என்று அர்த்தம். அஞ்சநேயர் பலம் நிறைந்தவர். நம்மால் ஆகாத மிகப் பெரிய காரியத்தையும் நொடி பொழுதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர். சரி பஞ்சமுக ஆஞ்சநேயர் வரலாறு குறித்து அறிந்து கொள்வோம் வாங்க…

ராமாயணத்தில், இராவணன் ராமனுடன் போர் புரிந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த யுத்தம் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருந்தது. ஒரு முறை ராமருக்கும், ராவணனுக்கும் நடந்த போரில் ராவணன் நிராயுதபாணியானான். கருணைக்கடலான ராமன் ராவணனை கொல்ல மனமின்றி, “இன்று போய் நாளை வா” என திருப்பி அனுப்பி விட்டார். இதன் மூலம், ராவணன் திருந்த ராமர் ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அரக்கக் குணம் படைத்த ராவணன் ராமன் அளித்த மன்னிப்பு, தான் திருந்துவதற்குத்தான் என உணராமல் மீண்டும் ராமருடன் போர் புரியவே நினைத்தான்.

மயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமனை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் ராம லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என உணர்ந்த விபீஷணன் ,யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்புமாறு ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில், ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற்றார். இந்த தெய்வங்கள் எல்லாம் போரில் அனுமன் வெற்றி பெற, தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர்.

இதன் மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார். இப்படி பஞ்சமுகத்தில் அவதாரம் எடுத்ததால் பக்தரின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார். இவரை வழிபடுபவருக்கு, நரசிம்மனின் அருளால் எடுத்த காரியத்தில் வெற்றி, லக்ஷ்மி கடாட்சமும், ஹயக்கிரீவர் அருளால் அறிவாற்றலும், ஆன்மீக பலன், வராகரின் அருளால் மன துணிவு, கருடனின் அருளால் அனைத்து விதமான ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதி, சகல செளபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படித்தான் பஞ்ச முக ஆஞ்சநேயர் அவதாரம் எடுத்தார்.

பஞ்சமுகங்களின் முக்கியத்துவம்

  1. கிழக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது, நமது பாவத்தின் கறைகளைப் போக்குவதுடன், மனதையும் தூய்மைப் படுத்துகிறது.
  2. தெற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது, நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தைப் போக்குவதுடன், நம்மை வெற்றி பெறவும் வைக்கிறது.
  3. மேற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீமஹாவீர கருட சுவாமி முகமானது, தீய சக்திகள் மற்றும் காத்து கருப்பினால் ஏற்படும் தீய விளைவுகளைப் உடனடியாகப் போக்குவதுடன், கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும் விஷத்தையும் முறிக்கிறது.
  4. வடக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீலஷ்மி வராக சுவாமி முகமானது, நமக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதுடன், அனைத்து விதமான அஷ்ட
  5. ஐஸ்வர்யங்களையும் அளிக்கிறது.
    மேல் நோக்கியுள்ள ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தினையும், நாம் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியினையும், புத்ர பாக்கியம் அளிக்கிறது.
உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button