Warning: mysqli_num_fields() expects parameter 1 to be mysqli_result, bool given in /var/www/vhosts/aanmeegamtamil.com/httpdocs/wp-includes/wp-db.php on line 3402
பூசணிக்காயை ஏன் ரோட்டில் உடைக்கின்றோம் ?
வீடியோக்கள்

பூசணிக்காயை ஏன் ரோட்டில் உடைக்கின்றோம் ?

Drishti poosanikai

ஆன்மீகமும் அதிசயமும் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஆன்மீகம் குறித்த அறிய பல தகல்களை நாம தொடர்ந்து இந்தச் சேனலில்.. பார்க்கப் போகின்றோம். அந்த வகையில் நாம் முதலில் பார்க்கப்போவது…

நாம் நம் வீட்டில் பூசாணிக்காயை ஏன் கட்டித் தொங்க விடுகின்றோம் ? ஏன் விசேச நாட்களில் வீட்டின் முன்பு பூசணிக்காயை போட்டு உடைக்கின்றோம் ? அதில் ஏன் குங்கும் மற்றும் சாசை வைக்கின்றோம் ? குறிப்பா புதுசா வீடு கட்டும்போது வாசலில் பூசணிக்காயில் பேய் உருவம் வரைந்து தொங்கவிட்டுவது ? இதுலாம் எதற்கு ? என்கின்ற பல கேள்விகளுக்கு விடையை தெரிந்து கொள்வோம்.

கூஷ்மாண்டா என்ற பெயருடன் இறையருள் பெற்ற மங்கை ஒருவள் இருந்தாள். அவள் மங்களத்தைத் தருபவள். அது போலவே கூஷ்மம் என்றால் முட்டை அல்லது அண்டம் என்றும் பொருள் தரும். முதன் முதலில் இந்த பிரபஞ்சம் தோன்றியபோது அது ஒரு முட்டை உருவில் வெளி வந்தது. அதில் இருந்து வெளிவந்த விஷ்ண்வை சுற்றி பல தேவிகளும் இருந்தார்கள். அதில் ஒருவளே கூஷ்மா என்பவள். கூஷ்மாவின் பக்தன் தான் கூஷ்மாண்டன். இவன் பகவான் விஷ்ணுவிடம் பல்வேறு அரிய வரங்களைப் பெற்று இந்திரலோகத்தையே நடுநடுங்க வைத்துவிட்டான்.

ஒரு கட்டத்தில் இதனால் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்ற அகம்பாவத்தில் பகவான் விஷ்ணுவை தாக்க முயன்றபோது, அவரை சுற்றி அரணாக இருந்திருந்த தீக்கணங்கள் பெரும் தீ நாக்குடன் அவனைத் தாக்க அப்படியே சுருண்டு விழுந்தான் கூஷ்மாண்டன். உயிர் பிரிகின்ற நேரம்….தான் யார், இந்த ஜென்மத்தில் என்னென்ன பாவங்கள் செய்தேன் என அனைத்தையும் உணர்ந்தான்.

மரணத் தருவாயில் கரம் கூப்பி விஷ்ணுவை வணங்கி, அவர் மீது தோத்திரம் பாடி தனக்கு நற்கதி தருமாறும், வேறு நல்ல பிறவி எடுக்க அருள் தருமாறும் கேட்க பகவான் மனம் இறங்கி நீ பூலோகத்தில் ஒரு இந்த அண்டத்தை பிரதிபலிக்கும் உருவில் உள்ள பூஷணிக்காயாக அவதரிப்பாய். உன்னைக் கொண்டு தோஷங்களை விலக்கிக் கொள்ள முடியும் என்ற வரத்தை கொடுத்தார்.

அசுரன் எப்படி பூமி மீது மோதி பாவ விமோச்சனம் பெற்றதோ ? அதேபோல்தான் நாம் நமது தோசங்களை விலக்கிக் கொள்ள பூசணிக்காயை பூமியில் போட்டு உடைக்கின்றோம். அப்படி உடைக்கும்போது அனைத்து துஷ்ட ஆத்மாக்களும் அவற்றுடன் ஒட்டிக் கொண்டுள்ள தோஷங்களுடன் பூமியிலே புதைந்து போகும். அதற்காகத்தான் பூஷணிக்காயை உடைக்கும் முன்பாக அதை சிறிது வெட்டி உள்ளே குங்குமத்தைக் கொட்டி பூஜித்தப் பின் அதை உடைப்பார்கள். அது அசுரனுக்கு செய்யும் பூஜையாகும்.

முக்கியமாக அமாவாசை, பித்ருக்களின் திதி போன்ற நாட்களில் பூசணியை தானம் செய்தால் கஷ்டங்களும் வியாதிகளும் விலகி ஓடும். ஆனால் அதே சமயத்தில் பூஷணிக்காயை இலவசமாக பெற்றுக் கொள்பவர்கள், யாரிடம் இருந்து அதைப் பெற்றுக் கொள்வார்களோ அவர்களது பாவங்களையும் தமது வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வார்கள்.

அதனால்தான் பூஷணிக்காயை பூஜை செய்து உடைப்பதின் மூலம் தீய ஆவிகளை அரக்கன் கூஷ்மாண்டனிடம் அனுப்பி விடுவதாகவும், அவற்றை அவன் கொன்றுவிட்டதைக் குறிக்கும் வகையில் குங்குமம் அந்தக் காயின் உள்ளே உள்ள தண்ணீருடன் கலந்து விட, அந்தக் காயை உடைத்ததும்- தீய ஆத்மாக்களை கொன்று விட்ட நிலையைக் குறிக்கும் விதத்தில், அந்தக் காய் சிவப்பு நிறத்தில் உடைந்து விழுகிறது என்றும், அந்த நேரத்தில் அங்கு சுற்றித் திரியும் தீய ஆவிகள் பூஷணிக்காயில் இருந்து வெளிவரும் அந்த சிவப்பு நிறத்தைக் காணும்போது, தம்மையும் அதனுள் உள்ள கூஷ்மாண்டன் கொன்று விடுவான் என பயந்து கொண்டு அங்கிருந்து ஓடிவதாக ஐதீகம்.

அதனால்தான் தீய ஆவிகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் தோஷங்கள் விலகி ஓட பூஷணிக்காயை வீட்டின் வாயிலில் முதலில் கட்டி தொங்க வைத்து சில நாட்களுக்குப் பின்னர் அதை எடுத்து பூஜை செய்து உடைப்பதும் ஐதீகம் ஆயிற்று. பூஷணிக்காயில் அமர்ந்து கொண்டு கூஷ்மாண்டன் பார்த்துக் கொண்டு இருப்பதினால்தான் கண்திருஷ்டி தரும் தீய ஆவிகள் அங்கிருந்து விலகி ஓடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

அது போலவே பணம் தராமல் பூஷணிக்காயை தானமாக பெறக்ககூடாது. அப்படி தானம் பெற்றாலும், தானத்தைப் பெறும்போது, ‘இன்று என் செய்கையினால் நான் பெற்ற ஒருநாள் நல்ல பலனை உனக்கு தருகிறேன்’ என்று தானம் தந்தவருக்கு கூறி விட்டோ அல்லது அதற்கு ஈடாக அரைக்காசு நாணயத்தையாவது தந்து விட்டு அதைப் பெற்றுக் கொண்டால் அது தானமாக பெற்றதாகாது. தீய பலன் தானம் பெற்றவரை சேராது என்பது ஐதீகமாகவும் ஆயிற்று. இப்படிப்பட்ட குணாதிசயத்தைக் கொண்ட பூஷணிக்காயை சாதாரணமாக யாரும் திருடுவது இல்லை. இனி எதனால் பூசணிக்காயை உடைக்கின்றோம் என்பதை தெரிந்து கொண்டு மறறவர்களுக்கும் சொல்லுங்கள்.

வீடியோவாக கண்டு ரசியுங்கள்

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source
hellomadurai.in

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button