ஆன்மீகம்பூஜைகள்

பூஜையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைப்பது ஏன் ?

நாம் வீட்டில், கோவிலில் பூஜை செய்யும் போது வெற்றிலை, பாக்கு ,பழம் வைத்து பூஜை செய்வோம்.அது எதுக்கு? என்று நிறைய பேர்களுக்கு தெரியாது. எது செய்தாலும் ஏன், எதுக்கு செய்கிறோம் என்று தெரிஞ்சு செய்தால், நாம் செய்கின்ற காரியம் சரியான முறையில் சென்றடையும் என்பதில் துளி கூட சந்தேகமில்லை. நம் மூதாதையர் நமக்கு நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். நாம்தான் அதை பின்பற்ற மறந்து விடுகிறோம். இனிமேலாவது அதைக் கடைபிடிப்போம்.

வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சம். வெற்றிலையின் நுனியில் லக்ஷ்மியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் இருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, பழம் வைத்துஇறைவனை வணங்குவது மரபு. வெற்றிலை, பாக்கு வைத்து வணங்கவில்லையெனில், எந்த ஒரு பூஜையும் நிறைவு பெறாது. வெற்றிலை, நோயில்லாமல் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. பாக்கு செல்வம் கிடைக்க வழிவகுக்கிறது. பாக்கு வைத்து இறைவனை வணங்கினால் நமக்கு குறைவற்ற செல்வம் கிடைக்கும். வாழைப்பழம் பாவ புண்ணிய விடுதலையை குறிக்கும். தேங்காய் அறிவை தரும்.

தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அர்ச்சனை செய்வது நமக்கு அறிவு, ஆரோக்கியம்,
செல்வம், பாவ-புண்ணிய விடுதலை ஆகியவற்றை தர வேண்டும் என்பதால் தான். கருணை கடலான இறைவனை பூஜிக்கும் போது இவற்றை வைத்து பூஜிக்க வேண்டும். திருமணத்திற்கு அழைக்கும் போது வெற்றிலை, பாக்கு, பழத்துடன் அழைக்க வேண்டும். அதுதான் மரியாதைக்குரிய செயல் ஆகும். விருந்தினர்களுக்கு சுப காரியத்தின் போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் ஒரு பொருளோடு வெற்றிலையும், பாக்கும் சேர்த்து கொடுத்தால் நம் குடும்பம் செழித்தோங்கும். மங்கள பொருளான வெற்றிலை,பாக்கை வலது கையால் வாங்க வேண்டும்.

வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. சீதை, “ராமன் போரில் ராவணனை வென்றான்” என்ற செய்தி கூற வந்த அனுமனிடம், “வெற்றி உண்டாகட்டும் “என்று வெற்றிலை மரத்தில் வெற்றிலையை பறித்து ஆசீர்வதித்தாள்.ஆகையால் வெற்றிலை மாலை சார்த்தி, அஞ்சநேயரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் என்பது உறுதி. வெற்றிலையை வாட விடுவது வீட்டிற்கு நல்லதல்ல. வெற்றிலை ஒரு கர்ப்ப மூலிகை.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

ஆன்மீகம் தமிழ்

ஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button